புது வெள்ளம்
புது வெள்ளம்! இச்சொல்லில்தான் தொடங்கிற்று எம் குழுமத்தின் வரலாற்றார்வம்... ஆம்! தன் எழுத்தின் வீச்சால், ஆழத்தால், பலரை வரலாற்றின் பால் ஈர்த்த பேராசிரியர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மணிமகுடமாம் பொன்னியின் செல்வன் என்ற சரித்திரக் கதையின் முதல் பாகம் "புது வெள்ளம் ". அப்புது வெள்ளத்தில் பயணித்து, திளைத்து, தமிழர் வரலாற்றின் திறம் வியந்து கோயில்கள் மேல் காதல் கொண்டு புறப்பட்ட நண்பர்கள் இணையம் வழி இணைந்து தொடங்கிய இந்த ஒரு சிறிய முயற்சியே பிரஸ்தாரா.






இன்னும் பசுமையாய் நினைவில் நிற்கின்ற நாட்கள். என் தந்தையின் கைப்பற்றி நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த ஞான சம்பந்தன் பிறந்த காழிப்பதியின் ஆலயத்தில் வலம் வரும்பொழுது கல்வெட்டுக்களைப் பார்த்து, அப்பா, அதெல்லாம் என்னப்பா ஏதோ கிறுக்கின மாதிரி இருக்கு..... என்று கேட்டதும், அப்பா அதை காதில் வாங்காமல் சம்பந்தர் தேவாரம் பாடிக்கொண்டு வந்ததும்...
கர்நாடக இசை வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற ஒரு மாபெரும் கலைஞர். அவருடைய இசை மிகக் குறைந்த அளவிலேயே ஆவணப் படுத்தப்பட்டிருந்தாலும், சென்ற நூற்றாண்டின் இசைக் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் அவருடைய இசையைப்பற்றி தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
நகரேஷு காஞ்சி என்று வடமொழியிலும், கல்வியில் சிறந்த காஞ்சி மாநகர் என்று தமிழிலும் புகழப்பெறும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரம் காஞ்சி. ஆயிரம் கோயில்கள் கொண்ட நகரம் என்றும் வழங்கப்படுகின்றது. கலை நயம் கொண்ட எண்ணற்ற கோயில்களைக் கொண்டது இந்நகரம். பல்லவ மன்னர்கள் எடுப்பித்த கோயில்கள் ஒவ்வொன்றும் அதிசயங்கள்தாம். அதில் மிகச்சிறந்த கோயில்களுள் ஒன்றுதான் காஞ்சி கைலாசநாதர் கோயில்.